Whatsapp

அன்பை வளர்த்து
ஆனந்தம் அறுவடை செய்வோம்
இனிய சொல் பேசி
ஈட்டலில் சிறப்போம்
உறுதியான உள்ளத்துடன்
ஊக்கமாக வாழ்வோம்
எளிமை வகுத்து
ஏற்றங்கள் அடைவோம்.
ஐம்புலன் காத்து
ஒற்றுமையில் சிறந்து
ஓதித்தவரை மதித்து
ஔவியம் நினையாது அகமகிழ்வோம்.

Comments